தெர்மல் வாட்ச் என்பது நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் குடிமக்களின் உரிமையைப் பாதுகாப்பதற்காக 1985 முதல் பணியாற்றி வருகிற ஒரு குடிமக்கள் நுகர்வோர் மற்றும் சிவிக் நடவடிக்கை குழு என்னும், இலாப நோக்கில்லாத, அரசியல் அல்லாத, தொழில்முறை நிறுவனத்தின் ஒரு முயற்சியாகும். வெளிப்படையானத்தன்மை, பொறுப்பாக்குதல் மற்றும் பங்கேற்பு சார்ந்து முடிவெடுத்தல் உள்ளிட்ட நல்ல ஆட்சியை ஊக்குவிக்க முயற்சித்து வருகிறோம்.
- அனல்மின் திட்டங்கள் சம்பந்தமாக EIA செயல்முறையில் நிர்வாக மற்றும் சுற்றுச்சூழல் செயல்முறைகள் மற்றும் விதிகள் தொடர்பாக பல்வேறு அம்சங்கள் மீதான தகவல்களை எளிதாக்குவது மற்றும் பரப்புவதன் மூலம் பங்குதாரர்களின் விரிவான பார்வையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் சென்றடைவது.
- ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் அனல்மின் திட்டங்கள் தொடர்பான தகவல்களை ஊடகக் கருவிகளான – வலைதளம், செய்திமடல் மற்றும் இணைய தளம் ஆகியவற்றைக் கொண்டு பரவச் செய்தல்.
- EIA செயல்முறையில் பயிற்சி தந்து திறன் உருவாக்கி உள்ளூர் சமுதாயங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஒரு கட்டமைபினை உருவாக்குவது. அதனால் அவர்களால் நடப்பு TPPகளின் எதிர்மறைத் தாக்கங்களை கண்காணிக்கவும் மட்டுபடுத்தவும் முடியும் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
- EIA செயல்முறையில் அரசாங்க நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வெளிப்படையானத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக கட்டயாமாக்கப்பட்ட நடைமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பது.
- EIA செயல்முறையில் சட்டப்பூர்வ, பொருளாதார, மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் பாதிக்கப்படும் சமுதாயங்களுக்கு தொழில்முறை ஆலோசனை வழங்குவது